ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். சமுத்திரக்கனி உடன் ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தார். பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு ஓஹோ என்று பிரபலமாக்கியது ஒரு போட்டோஷூட் புகைப்படம் தான்.
பச்சை நிற சேலை ஒன்றை கட்டிக்கொண்டு மொட்டை மாடியில் அவர் எடுத்த அந்த போட்டோ சூட் புகைப்படங்கள் ஒரு நேரத்தில் செம வைரலாக இருந்தது. அதனை தொடர்ந்து இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகளும் வந்தது. பிக் பாஸில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார் ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டியன் கீர்த்தி பாண்டியன் அவர்களின் சகோதரி அதாவது அருண் பாண்டியன் அவர்களுக்கு மகள் முறை.
ரம்யா பாண்டியன் தனக்கு யோகா பயிற்சி அளித்த லொவெல் தவான் என்பவரை காதலித்து வந்தார் அதன் பின் இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று ரிஷிகேஷ் அருகில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தில் கீர்த்தி பாண்டியன் கணவர் நடிகர் அசோக் செல்வன் கலந்து கொண்டார்.
நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நடத்த முடிவு செய்து உள்ளார்கள்.
இதோ திருமணம் புகைப்படங்கள்: