விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்த பிரபல தொகுப்பாளினி ரம்யா. இவர் விஜய் டிவியில் உங்களில் யார் பிரபு தேவா, யார் மனசுல யார், சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஓன் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் நிறைய மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
தற்போது இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை, மேலும் சில படங்களில் கெஸ்ட் ரோலில் இவர் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் விஜய் நடித்து வெளிவரவுள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி உள்ளார். தற்போது மிகவும் வித்யாசமாக கண்ணாடி முன் நின்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு உனக்குள் நான் என்றும் கருத்தும் தெரிவித்துள்ளார்.