விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே ரம்யா. இவர் பாய்ஸ் வ்ஸ் கேர்ல்ஸ், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.
தான் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட சில மனக்கசப்புகள் காரணமாக பணியிலிருந்து விலகி உடற்பயிற்சி செய்தல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஒரு சில தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் நடிகை அமலாபால் நடித்த ஆடை படத்தில் நடித்து மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் இவர் தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொது முடக்கம் காரணமாக வீட்டில் இருக்கும் ரம்யா இன்ஸ்டாகிராமில் தினம் தினம் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஓய்வு கொடுப்பதாக கூறியுள்ளார். சில காலம் தான் உயிரோடு இருப்பதற்கு நன்றி கூறவும் இந்த ஓய்வு தேவைப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகுகிறார்கள் என கேட்டு வருகின்றனர்.