பிரபல மாடலான ரைசா மிஸ் இந்தியன் தெற்கின் போட்டியில் பங்குபெற்று வெற்றியாளரும் ஆனார். இவர் வேலை இல்லா பட்டதாரி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட பிறகு இவர் புகழ் தமிழகம் எங்கும் பரவியது.இந்த சீசனில் ஓவியாவிற்கு பிறகு அதிக பிரபலம் அடைந்தவர் ரைசா வில்சன் தான். இவர் தற்போது நிறைய தமிழ் படங்களில் நடித்து பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

பொது முடக்கம் காரணமாக வீட்டில் இருக்கும் ரைஸா அவ்வப்போது தன் ரசிகர்களுடன் உரையாடுவார். எனினும் சில ரசிகர்கள் பிரபலங்களிடம் கொச்சையான கேள்விகளை கேட்பது வழக்கமான ஒன்றாக மாறிவருகிறது. அதுபோல ஒரு நெட்டிசன் உங்கள் பிச்சர் ஒன்று அனுப்புங்கள் என்று கூறியதற்கு பன்றி முகத்தை அனுப்பினார், அதன் முழு உடலையும் அனுப்புங்கள் என்று கூறியவுடன் முழு பன்றி உடல்நிலையும் அனுப்பினார். இதோ அந்த புகைப்படம்











