பிக்பாஸ் சீசன் 1 ல் பங்குபெற்றவர் நடிகை ரைசா. இவர் ஒரு பிரபல மாடல். பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மனதில் இவர் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் பெரும்பாலும் இந்த சீசனில் சர்ச்சையில் சிக்கவில்லை.
இவர் இந்த சீசனில் கலந்த பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஹரிஷிகல்யாணுடன் இவர் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். இவர் அந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்துள்ளார்.
தற்போது இவர் கைவசம் ஓரிரு படங்கள் உள்ளன. தனது ட்விட்டர் பக்கத்தில் புருவம், உதடு, முகத்தில் கடுக்கன் போட்டுள்ளபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிளீஸ் கழட்டுங்க இதெல்லாம் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.