உலக நாயகன் கமல் நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் வரும் சிரிச்சி சிரிச்சி வந்தா பாடலுக்கு செம செக்ஸியாக நடனம் ஆடியவர் நடிகை ரகசியா . இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நீங்கள் தற்போது ஏன் நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தப் பேட்டியில் அவர் பதில் அளிக்கையில் நான் தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பே ஹிந்தியில் பம்பை டு கோவா படத்தில் கதாநாயகியாக நடித்தேன். அந்த படத்துல சனாகான் என் படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் சாங் ஆடி இருப்பர். ஆனால் தற்போது அவர் கதாநாயகியாக வலம் வருகிறார். நான் இப்படி உள்ளேன் வாழ்க்கை ஒரு வட்டம் அது எல்லாருக்கும் ஒன்று தானே.
மேலும் சுந்தர் சி என்னை ஒரு ஸ்டேஜ் ஷோவ்வில் பார்த்து கதாநாயகியாக நடிக்கிறாயா என்று கேட்டார். அப்போது நான் காலேஜில் படித்து இருப்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு எனக்கு அப்படி வாய்ப்பு வரவில்லை. அதன்பிறகு பாக்கெட் மணி கிடைத்ததே என்று ஐட்டம் டான்ஸ் பண்ண ஆரம்பிச்சேன்.
இப்போது காலம் மாறிவிட்டது ஒரு கதாநாயகியே அதிக சம்பளத்திற்கு ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சென்று விடுகிறார்கள். மேலும் ஒரு நடிகர் இயக்குனர், நடன இயக்குனர், இசையமைப்பாள,ர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமையை கொண்டுள்ளார். போட்டிகள் அதிகம் என்னால் நீடிக்க முடியவில்லை, அதனால் தற்போது சில ஸ்டேஜ் ஷோக்களிலும் அறக்கட்டளை ஒன்றும் நிறுவி வருகிறேன் என்று அவர் பதிலளித்தார்.