தமிழ் சினிமாவில் 80களில் இருந்து கொடிகட்டிப் பறக்கும் நடிகை ராதிகா. இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரத்குமாரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
சரத்குமாருக்கு இது இரண்டாவது திருமணம். சரத்குமாருக்கு ஏற்கனவே ஒருவருட ன் திருமணம் நடந்து அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

ராதிகா சரத்குமார் உடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சரத்குமாரின் 66-வது பிறந்த நாளான நேற்று நள்ளிரவில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கேக் வெட்டி, கட்டி அனைத்து அவரது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவரது மகனும் உடனிருந்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது
