சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கால்பதித்து வெற்றிவாகை சூடியவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடர்ந்தவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற வித்தியாசமான சீரியலில் நடித்தார்.
இதன் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் நல்ல பிரபலமடைந்தார் இந்த சீரியலில் இருந்து கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. வைபவ் நடித்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. இருப்பினும் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் இப்போது இவர் கைவசம் நான்கிற்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.
தமிழில் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் நடித்துள்ள படம் வெளிவர உள்ளது. ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பிரியா பவானி சங்கர் நீண்ட நாட்கள் கழித்து போட்டோ ஷூட் செய்த மிகவும் அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அவரது கருத்துக்களை படித்து வருகின்றனர்.