சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தன்னை நடிகையாக நிறுத்திக்கொண்டு வெற்றிபெற்றவர் பிரிய பவனி சங்கர்.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்ற பல நடிகர்கள் இருப்பினும் முதன்முதலாக வெற்றிபெற்று கதாநாயகியாக வலம் வரும் நடிகைகளில் இவர்தான் முதல் முதல் இடம் என்பது இவருக்கு ஒரு தனி சிறப்பு.

அது போல நன்றாக தமிழ் பேசத் தெரிந்த ஒரு சில கதாநாயகிகளில் இவரும் ஒருவர்.
இவருக்கு தமிழ் சினிமாவில் எக்கச்சக்க ஃபேன் பாலோவிங் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டிலிருக்கும் பிரியா பவானி சங்கர் சமீப காலமாக தன்னுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு அதனுடைய நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார்.

அதுபோல சமீபத்தில் அவர் எங்கோ வெளியூரில் இருக்கும் சுற்றுலா சென்ற பொழுது மலையின் உச்சத்தில் உட்கார்ந்தபடி காலை கீழே தொங்க விட்டுக் கொண்டு ஒரு புகைப்படத்தையும், என்ற வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். இதைப் பார்த்தவர்கள் ரசிகர்கள் இதற்கெல்லாமா பயப்படுவீர்கள், அப்படியே ஒரு டைவ் அடிக்க வேண்டியதுதானே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.