நடிகைகள் பற்றிய கிசுகிசுக்களும் அவர்கள் காதலருடன் சேர்ந்து இருக்கிறாரா இல்லையா என்ற செய்தியும் அவ்வப்போது இணையத்தில் சமூக வலைத் தளங்களிலும் வெளிவந்து தான் இருக்கின்றன. இதற்கு சிலர் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். சின்னத்திரையின் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் நடித்த முதல் படமான மேயாதமான் படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது.
இருப்பினும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்
இந்நிலையில் சமீபத்தில் இவர் பொம்மை என்ற படத்தில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா உடன் நடித்து இருக்கும் போது இவருக்கும் எஸ் ஜே சூர்யா க்கும் காதல் என்று ஒரு பேச்சு வெளிவந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரிய பவனி சங்கர் அப்போதே தன் காதலன் புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில் சமீபத்தில் சித்ரா பௌர்ணமியன்று வாழ்க்கையே வெறுத்துப் போன மாதிரி ஒரு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
அதனால் பலர் இவருக்கும் காதலருக்கும் பிரேக்கப் செய்ததாக வதந்திகள் வேறு வெளிவந்தன. தற்போது அது குறித்து பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் தன்னைப் பற்றிய வதந்திகளை பார்க்கும் படிக்கும் பொழுது இப்படி தான் செய்வேன் என பதிவிட்டுள்ளார்.