செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் நடித்து மக்கள் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை பிரியபவானி ஷங்கர்.
சீரியல் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. நடிகர் வைபவ் நடித்த மேயாதமான் படத்தில் நடித்ததன் மூலம் இவரை கதாநாயகியாக ரசிகர்கள் ஒப்புக்கொண்டனர். இதன் பிறகு தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு நிறைய வர ஆரம்பித்தன.
தற்போது ரசிகர்கள் எதிர்பார்க்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரியபவானி ஷங்கருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கசக்க ரசிகர்கள். இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் இவரது ரசிகர்களால் வைரலாக்கப்படும்.
அதுபோல தற்போது இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியிருள்ளர் அதற்கு நெட்டிசன் ஒருவர் இவர் அழகை வர்ணிக்க உறங்காது யோசித்தேன் என பதிவிட்டுள்ளார். ஒருவர் இவர் ஒரு மேகமோ என கமெண்ட் செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.