பிரபல சன் தொலைக்காட்சியான சன் டிவி யில் ஒளிப்பரப்பாகிய பிரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர் மலையாளம் நடிகை பிரவீனா. இவரது நடிப்பு திறமையாலும்,பேச்சினாலும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் பிரவீனா. ஒரு அம்மாவாக இவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது. இதன் பின்னர் தற்போது நாயகி சீரியலிலும் அம்மாவாக நடித்துவருகிறார் பிரவீனா.
இந்நிலையில் இவர் சீரியலில் நடிப்பதர்க்கு முன்பே மலையாளம் சீரியல் மற்றும் மம்முட்டி ,மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் பிரவீனா.
இவர் இரண்டு முறை சிறந்த நடிகைக்கான கேரளா ஸ்டேட் அவார்ட் மற்றும் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்டுக்கான கேரளா அவார்ட் உள்ளிட்ட பலவிருதுகளை பெற்றுள்ளார். தமிழில் சீரியல் நடிகையாக இவர் அனைவராலும் அறியப்பட்டிருந்தாலும் ,மெல்ல மெல்ல வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார்.
அந்த வகையில் கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாகவும்,சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். இப்படி தமிழ் ரசிகர்களை மத்தியில் பிரபலமான இவர் சமூக வளையதளகளில் 18 வயது பருவ பெண்ணாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.இதோ அந்த புகைப்படம்
