தமிழ் சினிமாவில் பிரபல நடிகை பூர்ணா. இவர் தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, தகராறு, கொடிவீரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் பூர்ணா என்கிற ஷாம்னா காசிம்.
இவரது மார்க்கெட் குறைந்து வரவே பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சினிமாவில் ஒரு பாடலுக்கு மற்றும் நடனம் ஆடி வருவர் வருகிறார். இந்நிலையில் ஷாம்னா காசிம் என்ற பெயரில் டிக்டாக்கில் கணக்கு தொடங்கி அதில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் பூர்ணா.
இந்நிலையில் பூர்ணா விற்கும் அன்வர் என்ற பெயரில் டிக் டாக் செய்தவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். அவர் செல்போனில் பேசி வந்த நிலையில் அவருக்கு துபாயில் சொந்தமாக நகை கடை உள்ளது என்று கூறியுள்ளார் சின்ன வயதில் திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். திருமண செய்து கொள்ள ஆசை படுவதாக கூடிய அவரை பூர்ணா வீட்டில் வந்து பெண் கேட்கச் சொல்லி உள்ளார்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை பூர்ணாவை பெண் கேட்க வந்து உள்ளனர். ஆனால் அவர் மட்டும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பூர்ணா அப்புறம் சிறிது காலம் கழித்து இதை பற்றி பேசலாம் என்று அவர்கள் 3 பேரையும் அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பிறகுதான் தெரிந்துள்ளது அன்வர் என்ற பெயரில் டிக் டாக் செய்தவர் பெயர் ரபிக். இவர் என்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் உங்களது சினிமா வாழ்க்கையை நானே நாசமாக்கி விடுவேன். மேலும் திருமண வாழ்க்கையையும் சேர்ந்துக் கெடுப்பேன், என்று அவர் பிளாக்மெயில் செய்து உள்ளார்.
இதனால் பூர்ணாவின் அம்மா போலீசிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.