பொதுவாக நடிகைகள் தங்களை போட்டோ ஷூட் செய்து புகைப் படங்களாக வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளி வருவார்கள். இது தமிழ் சினிமா மட்டுமல்ல பாலிவுட்டிலும் இது வழக்கம்தான். குறிப்பாக கொரோனா லொக்கடவுனில் நடிகைகள் வீட்டில் இருந்துகொண்டே விதவிதமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தனர்.
இதுபோல போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதனால் ரசிகர்களிடம் எளிதில் பிரபலம் அடைந்து விடலாம் என்ற எண்ணம் நடிகைகளுக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் பிரபலம் ஆனால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கவனம் தன் பக்கம் திரும்பும் என்ற எண்ணத்தோடு அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் நடிகைகள்.
சமீபத்தில் கோவா கடற்கரையில் ஒரு நடிகை போட்டோ ஷூட் செய்துள்ளார் . மோசமான கவர்ச்சி படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் மனசை கிறங்கடித்த அந்த நடிகை ஒரு படி மேல் போய் கோவா கடற்கரையில் உடை ஏதும் அணியாமல் போட்டோ ஷூட் எடுத்துள்ளார். இந்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த நடிகையை கைது செய்துள்ளனர். அந்த நடிகை வேறு யாருமில்லை ஹிந்தி பட உலகில் பிரபலமான பூனம் பாண்டே.