தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடித்த சேவல் படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே இருந்தது. இதன் பிறகு இவருக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தது. தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வந்தார் பூனம் பாஜ்வா.
இடையில் சற்று உடல் எடை கூடியதால் சினிமாவில் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு நழுவப்பட்டு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரோமியோ ஜூலியட், அரண்மனை கிளி போன்ற படங்களில் இவர் துணை கதாநாயகியாகவே நடித்து இருப்பார்.
இந்நிலையில் தமிழில் இவர் சேவல், தெனாவட்டு, முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா, அரண்மனை கிளி, ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பூனம் பாஜ்வா வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மிகவும் கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ளார். சமீபத்தில் இவர் உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்தன. தற்போது மேலும் ஒரு படி தன் உடல் எடையை குறைத்து அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.