ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் நல்ல பெயரை வாங்குவது மிகவும் சிரமம் சினிமா துறையை பொருத்தவரை. அந்த வகையில் தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
இந்த படம் இவருக்கு பெரிதளவில் வெற்றியைப் பெறவில்லை. அதன் பிறகு பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ரித்திக் ரோஷனுடன் மொகஞ்சதாரோ படத்தில் நடித்தார். அந்தப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் வெளிவந்தவுடன் மிகப்பெரிய தோல்வியை அடைந்ததால் ராசி இல்லாத நடிகை என்ற முத்திரையை பாலிவுட்டில் வாங்கினார். அதன் பிறகு தெலுங்கில் நுழைந்த பூஜா ஹெக்டே தூக்கி கொண்டாட ஆரம்பித்தனர் ரசிகர்கள். அவர் நடித்த படம் அனைத்துமே வெற்றி பெற்றதால் இவர் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
பூஜா ஹெக்டே சமீபத்தில் நடித்த அளவைகுண்தா புறாமலு படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா சாங் இவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைய செய்தது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது பழைய நினைவுகளை புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகிறார். அதுபோல அல்லு அர்ஜுனுடன் நடித்த ஜகநாதம் படத்தின் பாடல் படப்பிடிப்பின்போது பூஜாவிற்கு அல்லு அர்ஜுன் திருநீறு விட்டதை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்