தற்போது சினிமா பிரபலங்கள் பலரும் இறந்துவருகின்றனர். இந்த வருடம் நிறைய கலைஞனர்களை சினிமா உலகம் இழந்து வருகிறது. இது சினிமா ரசிகர்களையும், சினிமா வட்டாரத்தினரையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மலையாள சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை பத்மஜா. இவர் மிகவும் புகழ் பெற்ற மறைந்த இசையமைப்பாளர் எம்.ஜி.ராதா கிருஷ்ணன் மனைவி ஆவார். பத்மஜா நிறைய மலையாள படஙக்ளில் நடித்துள்ளார்.
அண்மைய காலமாக இவருக்கு உடல் நிலை சரி இல்லாமல் இருந்தார். இவருக்கு வயது 68. இருதய கோளாறால் இவர் உயிர் இழந்துள்ளார். இவருக்கும் மறைந்த ராதாகிருஷ்ணனுக்கும் கிருத்திகா என்ற மகளும் ராஜ கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.
இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.