Tuesday, September 8, 2026
-- Advertisement--

கொலை மிரட்டல் முதல் பாலியல் அச்சுறுத்தல் வரை.. நடிகை பார்வதி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மலையாள சினிமாவில் நடிப்பாலும், தன்னுடைய தைரியமான கருத்துகளாலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகை பார்வதி திருவொத்து மீண்டும் ஒரு முறை தனது பேச்சால் கவனத்தை ஈர்த்துள்ளார்.

திரையுலகில் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பார்வதி, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட அதிர்ச்சிகரமான அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

பார்வதி பேசும்போது, “நான் செய்தது பெரிய சாதனை எதுவும் இல்லை. ஒரு பொறுப்புள்ள மனிதராக செய்ய வேண்டிய அடிப்படை விஷயத்தையே செய்தேன். ஆனால் அதற்காக நான் கடுமையான தாக்குதல்களை சந்திக்க வேண்டியிருந்தது” என்று கூறியுள்ளார். 2017-ஆம் ஆண்டு கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு குறித்து வெளிப்படையாக பேசிய பார்வதி, அதன் பின்னர் கடும் எதிர்ப்புகளையும் வெறுப்புப் பிரசாரங்களையும் எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

“என்னை மிரட்டினார்கள். கொலை மிரட்டல்கள் வந்தன. பாலியல் வன்கொடுமை மிரட்டல்களும் வந்தன. சிலர் என்னுடைய குரலை அடக்கவே முயன்றார்கள். ஆனால் நான் பின்னடையவில்லை” என அவர் உருக்கமாக கூறியுள்ளார்

திரையுலகில் பெண்களின் உரிமை, சமத்துவம், பாதுகாப்பு போன்ற விஷயங்களில் தொடர்ந்து பேசி வரும் பார்வதி, அதற்காக தனது சினிமா வாழ்க்கையிலும் பாதிப்புகளை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். “எனது அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகள் காரணமாக பல பெரிய பட வாய்ப்புகளை இழந்தேன். சில கதவுகள் எனக்காக மூடப்பட்டன. ஆனால் பின்னர் புரிந்தது… அந்த வாய்ப்புகள் எனக்கானவை அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles