களவாணி படத்தில் அறிமுகமானவர் நடிகை ஓவியா என்று பலரும் நினைத்து உள்ளனர். இவருக்கு களவாணி படத்திற்கு பிறகு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் இவர் நினைத்த அளவிற்கு வெற்றியை பெற வில்லை. அதனால் பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு பெரும் ரசிகர் கூட்டத்தை இவர் பெற்ற இவருக்கு ஓவியா ஆர்மி முதலியன இந்த சீசனில் இருந்து தொடங்க ஆரம்பித்தது.
இந்நிலையில் இந்த சீசனுக்கு பிறகு இவருக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வரும் என்றும் பெரிய நடிகர்களுடன் ஜோடி சேருவார் என்றும் பலரும் நினைத்திருந்தனர். ஆனால் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.
ஓவியா களவாணி படத்திற்கு முன்பே நாளை நமதே என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதான் இவருடைய முதல் படம். களவாணி அறிமுகப் படமாக கருதப்படுகின்றது. நாளை நமதே படத்தில் நடித்துள்ள புகைப்படங்கள் இதோ.