தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பிறகு முன்னணி நடிகர்களுக்கு தங்கை வேடத்தில் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ்.

இவர் ஓரிரு படங்களில் விஜய்க்கு தங்கையாக நடித்துள்ளார். அதன் பிறகு சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் தமிழ் மக்கள் இவரை கதாநாயகியாக பார்ப்பதில் ஈடுபாடு இல்லை.
இதனால் தெலுங்கு பக்கம் போன இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தான் இப்போது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் நிவேதா தமோஸ் ஒருவர். இருப்பினும் இன்னமும் தமிழ் சினிமாவில் தங்கை மகள் வேடங்களில் இவர் நடித்து வருகிறார்.

தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக இவர் நடித்தது தமிழ் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் சிறு வயதில் 90 ‘ஸ் குழந்தைகளிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற மை டியர் பூதம் சீரியலில் இவர் நடித்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.











