தமிழ் சினிமாவில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். தனது திறமையான நடிப்பால் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். இவர் கதைகளை தேர்வு செய்து .நடிப்பவர். பல பிரபல இயக்குனர்கள் நித்யா மேனனை முதல் லிஸ்டில் வைத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி, மெர்சல் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நித்யாமேனன். தமிழ்மொழி மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சற்று மொழுமொழுவென இருந்தாலும் அதற்கேற்ற படங்களை தேர்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் நித்தியா மேனன் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான அயர்ன் லேடி படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் நடித்து மிகவும் பாராட்டு பெற்றார்.

இந்நிலையில் நித்யா மேனன் இன்ஸ்டாகிராமில் கருப்பு மற்றும் வெள்ளை நிற பாவாடை சட்டை அணிந்து மிகவும் சூப்பரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.










