தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை நிகிலா விமல். இவர் தமிழில் வெற்றிவேல் என்ற படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து இருப்பார். இந்த படத்தில் வரும் உன்ன போல ஒருத்தன நா பாத்ததே இல்லே என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்த படத்திற்கு பிறகு கடாரி, பஞ்சுமிட்டாய், ஒன்பது குழி சம்பத், தம்பி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மலையாள சினிமாவில் வாய்ப்புகள் நிறைய வருவதால் இவர் தமிழ் படங்களில் நடிப்பது குறைவு.
இவர் தமிழ் படங்களில் மிகவும் குடும்ப பாங்கான உடை அணிந்து தான் திரையில் தோன்றுவார். ஆனால் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து படுக்கை அறை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.