தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவருடன் நடிக்கும் சக நடிகர்கள் திருமணமாகி செட்டில் ஆன நிலையில் இவர் மட்டும் எனும் சிங்கிளாக இருந்து வருகிறார். இவர் ஒரு சில நடிகைகளோடு கிசுகிசுக்களில் அடிப்பட்டார். அதில் மிகவும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடிகை அனுஷ்காவுடன் இவர் காதலில் உள்ளார், என்று இன்றளவும் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தன் உறவுக்கார பெண்ணான நடிகை நிஹாரிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. நடிகை நிகாரிகா விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இவர் தெலுங்கு சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் இவர் தற்போது ஐ ஜி பிரபாகரன் என்பவரின் மகன் சைதன்யா என்பவரை திருமணம் செய்து செய்யப்போவதாகவும், இருவருக்கும் நிச்சயம் முடிந்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் பிரபாஸ் ரசிகர்கள் அப்போது அவர் யாரை தான் திருமணம் செய்துகொள்வார் என்று கருத்து கூறி வருகின்றனர்.