சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை நஸ்ரியா. அதன் பிறகு மலையாள படங்களில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துவந்த இவர் தமிழில் நேரம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படம் நிறைய விருதுகளை வாங்கி தந்தது.
அதன் பிறகு தமிழில், ராஜா ராணி, வாயை மூடி பேசவும், நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா போன்ற படங்களில் நடித்தார். இதன் பிறகு இவருக்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே இவர் தமிழில் வேலைக்காரன் படத்தில் நடித்த பகத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இவர் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தன் பத்து வயதில் சுட்டி தனமாக பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ.