தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை மும்தாஜ். பல்வேறு படங்களை கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார். அதோடு தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் நடித்துள்ளார். நடிகை மும்தாஜ் வளையம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை மும்தாஜ் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பிறகு பெரிய அளவில் வெளியில் வராத மும்தாஜ் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நடிகை மும்தாஜ் சென்னையில் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டில் வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகளை வேலைக்கு வைத்துள்ளார். அந்த சிறுமிகள் அவர்கள் செய்யும் வேலை பிடிக்காததால் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் இரண்டு சிறுமிகளில் ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் 2 சிறுமிகளையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் நடிகை மும்தாஜுக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
