தமிழில் விஷால், பிரபு, நதியா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்த படம் தாமிரபரணி. இந்த படத்தில் நடிகை முக்தா அறிமுகம் ஆனார். இவர் மலையாள படங்களில் நடித்து இருந்தாலும், தமிழில் இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் பிறகு இவர் பெரிதாக படம் ஏதும் நடிக்கவில்லை. தனது சிறுவயது நண்பரையே திருமணம் செய்துகொண்டார். இவருக்கு கியாரா என்ற பெண் குழந்தை உள்ளது.
தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் நடிகை முக்தா, தற்போது தன் மகளுடன் நீண்ட நேரம் செலவிட்டு வருவதாக கூறி உள்ளார். திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன நடிகை முக்தா புகைப்படம் இதோ.