எவ்வளவுதான் நெட்டிசன் கழுவி ஊற்றினாலும் அதை பற்றி கவலையே படாதவர் மீராமிதுன். இவர் தமிழில் 8தோட்டக்கள் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு என்னை அறிந்தால் படத்தில் அஜித் த்ரிஷாவிற்கு தோழியாக நடித்தார் .ஆனால் ஒரு சில காரணங்களால் இவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டன.

அதன் பிறகு தன்னை எப்படியாவது பிரபல படுத்திக்கொள்ள இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் படுமோசமான வீடியோக்களையும் புகைப் படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். எப்படி இப்படியெல்லாம் உடை அணிகிறார்கள் என்று கேட்டால் இதுதான் பேஷன், இது பற்றி இங்கு யாருக்கும் தெரியவில்லை, என்று அவர் நம் மீதே புகார் கூறுவார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் எதற்கும் அடங்காமல் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.தற்போது தனக்கு நிச்சயம் முடிந்து விட்டது கல்யாண தேதி வரும் காதலர் தினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தனது காதல் கணவர் யார் என்பதை மட்டும் அவர் குறிப்பிடவே இல்லை .ஏற்கனவே இவருக்கு திருமணம் நடந்து திருமணம் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.