Saturday, April 20, 2024
-- Advertisement--

இன்னும் சில தினங்களில் திருமண நாள்…!!! அதுக்குள்ள இப்படி நடந்துட்டே மீனாவின் கணவர் மறைவு குறித்து ரசிகர்கள் வருத்தம்..!!!

பிரபல நடிகை மீனா 1982 ஆம் ஆண்டு நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மீனாவிற்கு அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த படத்தில் ரஜினி அங்கிள் ரஜினி அங்கிள் என்று மீனா அழைப்பார். சினிமாவில் பேபி மீனாக அறிமுகமாகி அதன் பின் உச்ச நட்சத்திரமாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கஷ்டப்பட்டு முன்னணி நடிகையாக சினிமாவில் வலம் வந்தவர்.

மீனா 2009 ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

மீனாவிற்கு நைனிகா என்ற குழந்தை இருக்கிறார். இந்நிலையில் மீனா அவர்களின் கணவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றி உள்ளனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மீனா அவர்களின் கணவர் வித்யாசாகர்.

ஏற்கனவே நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் கடந்த சில மாதங்களாகவே இருந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தாக்கமும் இருந்ததால் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.

மீனாவிற்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி தன்னுடைய திருமண நாள் நெருங்கும் நேரத்தில் கணவர் இறந்திருப்பது பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles