Saturday, April 20, 2024
-- Advertisement--

46 வது பிறந்தநாளை கொண்டாடிய மீனா…!!! கணவர் இன்று இல்லாவிட்டாலும் அவரின் ஆசீர்வாதங்கள் என்றும் இருக்கும் உருகும் ரசிகர்கள்..!!!

மீனா தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை சிறுவயதிலிருந்து சினிமாவில் ஆர்வம் உடைய மீனா தொடர்ந்து சினிமாவில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குட்டி பெண்ணாக நடித்திருந்தார் ரஜினி அங்கிள் ரஜினி அங்கிள் என்று ரஜினியை அந்தப் படத்தில் ஆசை ஆசையாய் கூப்பிடுவார் மீனா. அதன் பின் சில வருடங்கள் கழித்து மீனா சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாவே நடித்திருந்தார். மீனா 12 ஜூலை 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். மீனாவிற்கு நயனிகா என்ற மகள் உண்டு. நைனிகா தளபதி விஜயின் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மீனா அவர்களின் கணவர் வித்யாசாகர் அவர்கள் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இளம் வயதிலேயே நுரையீரல் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தது மீனா குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. எவ்வளவோ மீனா போராடியும் தனது கணவரை காப்பாற்ற முடியவில்லை என்று துடுதுடித்து போனார்.

தனது கணவனை இழந்த சோகத்தில் இருந்த மீனாவின் மனநிலையை மாற்றுவதற்காக மீனாவின் நெருங்கிய நண்பர்கள் அவரது வீட்டிற்கு தனது குடும்பத்தோடு சென்று மீனாவை மகிழ்வித்து வந்தனர். என்ன தான் மீனா சந்தோஷமாக இருந்தாலும் தனது கணவரை இழந்த வருத்தத்திலிருந்து அவர் மீளவில்லை என்று கூறி வந்தார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி மீனாவின் 46 ஆவது பிறந்தநாள் வந்தது. மீனாவின் பிறந்த நாள் தினத்தில் அவரது நெருங்கிய தோழிகள் அவரது வீட்டிற்கு சென்று மீனாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ராதிகா சரத்குமார் அவர்களும் மீனாவின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் ஒன்று கொடுத்து அசத்தியுள்ளார்.

இந்த நேரத்தில் மீனாவின் கணவர் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக கொண்டாடி இருப்பார் என்று கூறுகிறார்கள் சினி வட்டாரத்தில்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles