மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சுவாரியர். மலையாள சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவர். தமிழில் எப்படி சிம்ரன், ஜோதிகா என்றும் நிலைத்திருக்கும் வகையில் இருக்கிறார்களோ ,அது போலவே தான் இவர் மலையாளத்திலும்.
இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில்மலையாளத்தில் 50 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படமான அசுரன் படத்தில் தன் அசாத்திய நடிப்பை காட்டி தமிழ் மக்களை தவிக்க செய்தார்.
இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடிக் கொண்டே காற்றில் பறக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் நடனத்திற்கு மட்டும்தான் சிறகுகள் தேவை இல்லை எனவும் கூறியுள்ளார்.