தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை மம்தா மோகன். விஷால் நடித்த சிவப்பதிகாரம் என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் .அதன்பிறகு இவர் குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தார். இந்நிலையில் இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி தற்போது சிகிச்சை பெற்று முழுவதுமாக குணமடைந்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.இந்நிலையில் இவர் தமிழில் ஊமைவிழிகள், உள்ளே வெளியே 2 என்ற போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மம்தா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அடையாளமே தெரியாமல் மாறிவிட்டீர்கள் என ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.