பிக் பாஸ் எனும் நிகழ்ச்சி தமிழகத்திற்கு வந்த போது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதன் சீசன் 1 மிகவும் வைரலானது மக்கள் அனைவரும் அதில் பங்கு பெற்றவர்களை பெரிய நட்சத்திரங்களாகவும், ஆளாளுக்கு ஒரு ரசிகர் கூட்டத்தையும் தானாகவே ஏற்படுத்திக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் உலக நாயகனான கமல் தொகுத்து வழங்கினார். அதன்பிறகு சீசன் 2 மிகவும் மோசமான வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்த சீசனில் யார் யார் பங்கு பெறப் போகிறார்கள். என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்ட நிலையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா என்பவர் பிக் பாஸ் சீசன் 3 இன் 16 போட்டிகளில் ஒருவராக பங்கு பெற்றார்.
இவர் இந்த சீசனில் பங்கு பெற்று மக்களின் பேராதரவைப் பெற்ற இவர் இந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகும் இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமாகி கொண்டு தான் வருகிறது. இந்நிலையில் தற்போதுபதி பிரன்ஷிப் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது பதின்பருவ புகைப்படம் அதாவது 18 வயசு புகைப்படம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.