இலங்கை நாட்டில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. இவர்களுக்கு தமிழ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ் சினிமாவில் பட வாய்ப்பை பெறுவதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பிக் பாஸ் சீசன் 3 இல் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர் தான். இந்த சீசனில் இவருக்காகத்தான் முதலில் ஆர்மி தொடங்கப்பட்டது. இவர் பிக் பாஸ் சீசன் 3 இறுதி சுற்று வரை பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் வெளியேறிய பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த ஒரு வருடமாக இவருக்கு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை. இந்நிலையில் தற்போது இவர் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். கதா நாயகியாக மாறிய பின்பு லொஸ்லியாவிடம் பல மாற்றங்கள் தெரிகிறது என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் ஸ்லீவ் ஜாக்கெட் அணிந்து ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதில் நீங்கள் நீங்களாகவே இருங்கள். உலகம் வேண்டுமானால் உங்களை அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளட்டும் என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CBF8v46JvRG0V-0MRsny2aR1CawVkI8JEvhwao0/