இலங்கை நாட்டு தமிழ் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இவர் தமிழ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ் சினிமாவின் பட வாய்ப்பிற்காக பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார்.

இந்த சீசனில் ஆரம்பத்தில் மிகவும் துறுதுறு எனவும் அனைவரிடமும் நட்பு பாராட்டி அதன் பிறகு அவனுடன் காதல் பழகி வந்தார். தன் அப்பாவின் அறிவுரையின்படி அந்த காதல் இருந்து விலகிவிட்டார். இந்த சீசனில் லாஸ்லியாவுக்கு தான் ஆர்மி தொடங்கப்பட்டது. அதன்பிறகு கவினிற்கு தொடங்கப்பட்டது.

இவர்கள் காதல் இன்று வரை புரியாத புதிராகவே முடிந்துவிட்டது. இந்நிலையில் சீசனில் இருந்து வெளியேறிய ஒரு வருடம் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். தற்போது அதற்கு இரண்டு படங்கள் ஒப்பந்தமாகி உள்ளன. அதில் முதல் படம் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முதலாக கதாநாயகனாக நடிக்கும் படம். படத்தின் பெயர் பிரெண்ட்ஷிப். இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் இணையத்தில் மிகவும் வைரலாகி வந்தன. படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார் . இதுகுறித்து புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்













