தமிழில் கும்கி என்ற படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்தவர் லட்சுமி மேனன். இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கி இருப்பர். இந்த படத்தை பல படவாய்ப்புகள் வர ஆரம்பித்தன. தொடர்ந்து ஆர்யா, விஷால், சசிகுமார்,அஜித், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்தார்.
இவர் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது உடல் எடை அதிகரித்து தொப்பை போட்டதால், சினிமா வாய்ப்புகள் வரவில்லை, அதனால் சினிமாவை விட்டு விலகி படிப்பில் ஆர்வம் காட்டி வந்த லட்சுமி தற்போது மீண்டு சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் லட்சுமி, சமீபத்தில் ஒரு நடன வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கீழே தரையில் தண்ணீர் இருப்பதாய் பார்க்காமல் ஆடும் போதே கீழே விழுந்து விட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.