தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து விஜய், சூர்யா,சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் இறுதியாக சாணி காகிதம் என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. மேலும் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் மற்ற மொழிகளான தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் கிராமத்து பெண் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு தனது கையில் ஒரு குருவியை வைத்துக்கொண்டு இது தனது கோ ஸ்டார் என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ்க்கு என்ன ஆச்சு என கமெண்ட் செய்து வருகின்றன.