திருவனந்தபுரம்: நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் கலக்கி வருகின்றார். அடுத்ததாக தமிழிலும் பாலிவுட்டிலும் அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ரகு தாத்தா படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா படத்தை மிகப்பெரிய அளவில் கீர்த்தி சுரேஷ் எதிர்பார்க்கிறார். ஹிந்தியில் அட்லீ தயாரிப்பில் தெறி படத்தின் ரீமேக் பேபி ஜான் படத்தில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் அடுத்த மாதத்தில் தன்னுடைய திருமணத்தை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்?:
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதத்தில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தீயாக தகவல்கள் பரவி வருகின்றன. மிகவும் பிரம்மாண்டமாக இந்த திருமணம் கோவாவில் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
15 வருட நண்பர் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஆண்டனி தட்டிலை என்பவரை டிசம்பர் 2வது வாரத்தில் கீர்த்தி சுரேஷ் கரம் பிடிக்க உள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. இரு குடும்பத்தினரின் ஆசியுடன் கோவாவில் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறும் எனவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்திற்கு பின் கீர்த்தி நடிப்பாரா அல்லது சினிமாக்கு குட் பை சொல்லுவாரா என்று இனி தான் தெரிய வரும்.