தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் ஜோடியாக நடித்து அறிமுகமானர் . முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இவருக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்தன.

இந்தப் படத்திற்குப் பிறகு முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு கதைகள் நடித்ததன் மூலம் தேசிய விருதும் பெற்றார்.

முன்னணி நடிகைகளை அந்தஸ்தை பெற்ற பிறகு மிகவும் ஒல்லியாக உள்ளார். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் கீர்த்தி அவரது பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் சீரியலில் நடித்துவரும் நடிகர் சஞ்சீவின் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறார். மேலும் அவரோடு ஒரு நாயும் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.