80 இல் இருந்தே நடிக்கத் தொடங்கியவர் நடிகை கஸ்தூரி. ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவான பல படங்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் படத்தில் நடிகர் கமலுக்கு தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக கஸ்தூரி ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். பிரதமர் மோடி ஆனாலும் சரி நம் உள்ளூர் தலைவர்கள் ஆனாலும் சரி இவர் மனதிற்கு தப்பு எனப்படும் விஷயங்களை தைரியமாக வெளிப்படுத்தும் தன்மை உடையவர். இவர் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மிகப் பெரும் சர்ச்சைகளை இந்த சீசனில் இவர் கிளப்பினார்.
இதன் பிறகு இவர் தற்போது அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பொதுப் பிரச்சினைகளை பிரச்சனை பற்றி பேசும் கஸ்தூரி தன் சொந்த புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். தற்போது தன் மகனுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் அவர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.