பிரபல தமிழ் நடிகையான கஸ்தூரி அவ்வப்போது தனது இணையப்பக்கத்தில் மிகவும் சமூகப் பிரச்சினை குறித்து கருத்து பதிவிட்டு வருகிறார். இதனால் இவர் மக்களிடையே நன்கு பிரபலம் அடைந்து வருகிறார். இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை கங்கனா ரணவத் பற்றி ரிபப்ளிக் டிவி யில் அர்னாப் கோஸ்வாமி நேரலையில் விவாதம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த தமிழ் நடிகை கஸ்தூரி ஆனால் அவரை பேச அனுமதிக்கவில்லை, கஸ்தூரி எவ்வளவு தடவை முயற்சி தொடர்ந்து அவரது கருத்துக்களை முன்வைத்து கொண்டிருந்தார். இதனால் மிகவும் கடுப்பானார் கஸ்தூரி. இதனால் நிகழ்ச்சி நடந்துகொண்டு இருக்கும்பொழுதே மதிய உணவை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.
இது குறித்த காட்சிகள் இணையத்தில் மிக வேகமாக பரவியதால் டுவிட்டரில் மிகவும் ட்ரோல் செய்யப்பட்டு வந்தார். இந்த வீடியோவுக்கும் அங்கு நடந்தவற்றை விவரமாகக் ட்விட் ஒன்றை செய்துள்ளார். அதில் கஸ்தூரி பொதுவாக அர்னாப் நடத்தும் விவாதத்தில் கிட்டத்தட்ட பாதி நேரத்திற்கும் மேலாக அவர் பேசுவார். விருந்தாளிகளை பேச விடமாட்டார். நான் 60 நிமிடங்கள் பார்த்தேன். அவர் எப்படியும் என்னை பேச அனுமதிக்க மாட்டார். அதனால் நான் மதிய உணவை சாப்பிட ஆரம்பித்து விட்டேன். ஆனால் ஸ்விப் ஆப் செய்ய மறந்து விட்டேன். இந்த குழப்பத்திற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் இதில் எந்த குற்றமும் மரியாதையும் இல்லை என அவர் ரிப்ளை செய்துள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் நீங்கள் சாப்பிட்டது சேமியா வா என்று கேட்டதற்கு இல்லை பொங்கல் அப்பொழுதுதான் அவர் பேசுவது மறந்து தூக்கம் வரும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் சிலர் சாப்பிடுவது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை எனவும் கஸ்தூரிக்கு சப்போர்ட்டாக ட்விட் செய்துவருகின்றனர்.