தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தில் வெற்றிகரமாக வலம் வந்தவர் காஜல்அகர்வால். இவர் அஜித், விஜய் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது இவர் கையில் ஒரு சில படங்களை உள்ளன.

காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பொம்மலாட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் . இவருக்கு நிஷா அகர்வால் என்ற ஒரு தங்கை உள்ளார். நிஷா அகர்வாலும் 23 தமிழ் படங்களில் நடித்து அதன்பின் திருமணம் செய்து கொண்டார். காஜல் அகர்வாலுக்கு தற்போது 30 வயதைத் தாண்டிவிட்டது. ஆனாலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. காஜல் பாலிவுட்டை சேர்ந்த ஒரு தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்யப்போகிறார் என்று வதந்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை.

தற்போது காஜல் அகர்வால் தனது இணையப்பக்கத்தில் அவர் குளியல் தொட்டியில் இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குளியல் தொட்டியில் அவர் படுத்து ஐஸ்கட்டிகளை நிரப்பி அதில் படுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.












