கங்குவா திரைப்படம் வெளியான தினத்தில் இருந்து இன்று வரை அந்தப் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது.
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையுடன் இருந்தது திரையுலகமே. அதற்கேற்றது போல் இந்த திரைப்படம் 2000 கோடி வசூல் செய்யும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா கூறியிருந்தார். டிசம்பர் மாதம் கங்குவாவின் சக்சஸ் மீட் வைப்போம் என்று நம்பிக்கையுடன் பேசி இருந்தார்.
இது ஒரு புறம் இருக்க நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை பிற மாநில இயக்குனர்கள் வாயை பிளந்து பார்க்க போகிறார்கள் என்று கூறியிருந்தார். இவர்களின் பேச்சு அந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கங்குவா பாகுபலியை மிஞ்சும் என்றெல்லாம் பேசினார்கள் படக்குழுவினர்கள். இவர்கள் கொடுத்த ஓவர் பில்டப் தான் படத்திற்கு பெரிய எதிர்மறையான விமர்சனங்கள் வர காரணமாக இருந்தது.
இந்நிலையில் சூர்யாவின் மனைவி ஜோதிகா அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த அறிக்கையில் நான் சூர்யாவின் மனைவியாக இதை நான் கூறவில்லை ஒரு சினிமா ரசிகையாக இதை கூறுகிறேன். கங்குவா திரைப்படம் முதல் 30 நிமிடம் சரி இல்லை மற்றும் சத்தம் பிரச்சனைகள் இருந்ததை ஒப்பு கொள்கிறேன். படம் வெளியான முதல் நாளே கங்குவா குறித்து நெகட்டிவ் கமெண்ட்டுகள் வெளியானது வருத்தமளிக்கிறது. 3 டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கங்குவா படக்குழு எடுத்த முயற்சிகளுக்கும் படத்தின் கான்செப்ட்டுக்கும் பாராட்டுகளை தெரிவிக்காமல் எதிர்மறை விமர்சனம் ஏன், குறைகள் இல்லாமல் படம் எடுக்க முடியாது.அதற்காக ஒட்டுமொத்த படத்தையும் குறைக் கூற கூடாது.
கங்குவா படத்தில் இருந்த நல்ல விஷயங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களுக்கு ஸ்கோப் இருக்கிறது. சிறுவனின் அன்பு, கங்குவாவின் பழிக்கு பழி போன்றவை எல்லாம் உங்களுக்கு தெரியவில்லை. ஒரு படத்தை விமர்சனம் செய்யும் போது நல்ல விஷயங்களை எல்லாம் மறந்துவிடுகிறீர்கள். திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள் என்று கூறிய அவர்.
இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களை கண்ட அதிர்ச்சி அடைகிறேன் பெண்களை இழிவாக சித்தரித்து இரட்டை படுத்த வசனங்கள் கொண்ட படங்களை கூட இப்படி விமர்சனங்கள் வந்தது இல்லை படம் வெளியான முதல் நாளில் இருந்து இது போன்ற அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. அதற்காக ஒட்டுமொத்த படத்தையும் குறை கூறக்கூடாது கங்குவா படம் குறித்த எதிர்மறை விமர்சனங்களை பரப்பு குழுவினர் புறந்தள்ள வேண்டும் என்று ஜோதிகா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிக்கைக்கு ரசிகர்கள் நீங்கள் படத்தை ஓவர் பில்டப் பண்ணாமல் ஒழுங்காக எடுத்து இருந்தால் நாங்கள் கொண்டாடி இருப்போம் பணத்தை சரியாக எடுக்காமல் மக்கள் மீதும் விமர்சனம் மீதும் குறை சொல்வது தவறு எதிர்மறை விமர்சனம் என்பது சூர்யாவிற்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் வைக்கப்படுவது தான் படம் நன்றாக இருந்தால் கொண்டாட போகிறோம் என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.