தமிழ் சினிமாவில் 80,90 களில் தொழில் கொடி கட்டி பறந்த நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்த போது கிடைக்காத வரவேற்பு, குணசித்திர வேடங்களில் நடித்த பிறகு கிடைத்தது.
தமிழில் நடிகர் சூர்யா நடித்த ஆறு படத்தில் சவுண்டு சரோஜா கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் நல்ல நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அழகு சீரியலிலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி சமையல் செய்து அசத்தி வருகிறார், அதோடு தன் ஆறு படத்தில் நடித்த சவுண்ட் சரோஜா பட பாணியில் இந்த யூடியூப் சேனலில் அவர் வருவதால் இவருக்கு நிறைய ரசிகர்களும் ஒரு நல்ல மரியாதையும் வந்துள்ளது. அளவுகடந்த பாசத்தையும் சில டிப்ஸ்களையும் இவர் கொடுத்து வருகிறார்.