தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது முக்கிய கதாநாயகியாக வலம் வந்திருக்கிறார். இவரது வாழ்க்கைப் பயணத்தைக் குறித்து ஒரு மேடை நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

அதில் நான் சென்னையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண். குடிசைப்பகுதி வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். எங்கள் வீட்டில் அப்பா அம்மா நான் மூன்று சகோதரர்கள் என 6 பேர்.
நான்தான் கடைசி பெண் நாங்கள் தெலுங்கில் தான் பேசுவோம். எனக்கு வயது எட்டு இருக்கும் பொழுது என் அப்பா இறந்து போனார். அம்மா எல்ஐசி முகவர் ஆக பணியாற்றி எங்களை வளர்த்து வந்த நிலையில் எனக்கு 12 வயதாக இருக்கும்பொழுது எனது மூத்த அண்ணன் காதல் பிரச்சினையால் இறந்து போனார். அது தற்கொலையா, கொலையா என்பது இதுவரைக்கும் எங்களுக்குத் தெரியாது.
அதன் பிறகு என்னுடைய என்னுடைய மற்றொரு அண்ணனும் சாலை விபத்தில் இறந்தான்.அதன் பிறகு என் எங்கள் அண்ணன் சம்பாதிக்கத் தொடங்கினார் குடும்பத்தின் சுமையை தாங்கி பிடிக்க மகன் இருக்கிறான் என்று இருந்த நேரத்தில் அண்ணனும் இறந்து போனார்.

நான் வேலைக்கு சென்றேன்,டிவி சீரியலில் நடிக்க ஆரம்பித்து முதலில் சம்பளம் குறைவு, பின் ஒரு நாளைக்கு 1500 ரூபாய், சம்பளம் மாதம் 6 நாட்கள் மட்டுமே சூட்டிங் இருக்கும். கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் பெற்ற வெற்றியை பயன்படுத்தி சினிமா வாய்ப்புகள் தேடினேன்.

முதலில் என் முகத்திற்கு கதாநாயகி வேடம் கிடைக்காது என பலர் என்னை ரிஜெக்ட் செய்தனர் . சில வருடங்களுக்கு பிறகு அட்டகத்தி படத்தில் நடித்தேன், பின் பண்ணையாரும் பத்மினியும் ரம்மி போன்ற படங்களில் நடித்தேன். அதன் பிறகு காக்கா முட்டை படம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அதன்பிறகு வடசென்னை, தர்மதுரை ஆகிய படங்களில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனக்கு எப்பொழுதும் யாரும் வாய்ப்பளித்தது இல்லை, நான் என் திறமையை மட்டுமே நான் நம்புகிறேன், நானே எனக்கு ஆதரவு என அவர் கூறியுள்ளார்.










