மேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்து குணசித்திர நாயகியாக அறிமுகமானவர் இந்துஜா. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் என தொடர்ந்து வந்தன. இவர் தமிழில் மேற்கூறிய 60 வயது மாநிறம், மகாமுனி, சூப்பர் டூப்பர் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
இந்த படங்களை தொடர்ந்து இவர் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக இடம்பெற்றார். இவருக்கு தற்போது காக்கி, நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், படங்கள் கைவசம் உள்ளன.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இந்துஜா சமீபத்தில் ட்விட்டரில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 60 வயது மூதாட்டி மிகவும் வலிமையோடு யோகா செய்யும் வீடியோ ஒன்று உள்ளது அதை பார்த்த பிறகும் நானும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளார்.