தொலைக் காட்சிகளில் நகைச்சுவை கலைஞராக பணிபுரிந்து பல மேடைகளில் ஏறி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரோபோ சங்கர்.
இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி மேலும் மேலும் பல முயற்சிகளை செய்து பல வாய்ப்புகளை தேடி தற்போது தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக வலம் வந்துள்ளார். இவரது மகள் இந்திரஜா ரோபோ ஷங்கர் பிகில் படத்தில் விஜயுடன் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடித்த பிறகு இவருக்கு நல்ல புகழ் கிடைத்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிய போது, ரசிகர் ஒருவர் உங்கள் அப்பாவுடன் காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் ?என்று கேட்டதற்கு நான் எங்க அப்பாவை மிகவும் காதலிக்கிறேன் அதனால் நான் நடிக்க கூச்சப்பட மாட்டேன். எல்லாம் இது ரொம்ப சிம்பிள் ப்ரோ, என்று பதிலளித்துள்ளார்.