தமிழில் தமன்னா நடித்த கேடி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இலியானா. இவருக்கு தமிழில் பெரிதும் வரவேற்பு இல்லை என்பதால் தெலுங்கு பக்கம் போய்விட்டார். இவரை தெலுங்கு மக்கள் மலர் தூவி வரவேற்றத்தால் அங்கேயே செட்டிலாகிவிட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் இலியானா.
தெலுங்கில் இவர் மார்க்கெட் உச்சத்தில் உச்சத்தில் இருக்கும்போது தான் தமிழில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடித்த நண்பன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதில் மிகவும் ஒல்லியாக இவர் தோற்றமளிப்பார். இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து முன்னணி நடிகையாக இருந்த இலியானா. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த போட்டோகிராஃபர் ஆண்ட்ருசை காதலித்து லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் சில காலம் வாழ்ந்தார். பின்னர் அவர்களுக்குள் செல் மனக் கசப்பு ஏற்பட்டதால் இவர்கள் காதல் முறிந்துவிட்டது. காதல் முறிவுக்கு பிறகு சிறிது காலம் சோகத்தில் இருந்த இலியானா தற்போது மீண்டும் அதே புத்துணர்ச்சியோடு தன் அரசியல் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோகிராபர்களுக்கு ஒற்றைக்காலில் நின்று போஸ் கொடுத்தபடி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எப்போதும் கிட்டத்தட்ட 90% நேரங்களில் மூடாகவே இருக்கிறேன் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.