தனுஷ் நடிப்பில் கலந்த 17 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் திருடா திருடி. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாயாசிங் நடித்து இருப்பார். இந்த படத்தில் வரும் ஒரு பாடல் ராசா ராசா என் மன்மத ராசா என்ற பாடல் மிகவும் வைரலானது. இந்த படத்தில் இந்த பாடலுக்கு சாயாசிங் கருப்பு நிற உடையில் மிகவும் அனல் பறக்கும் வேகத்தில் நடனமாடி இருப்பார்.
அதன் பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்பதால் அண்ணி அக்கா வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது சன் டிவியில் சத்யா என்ற தொடரிலும் இவர் தனது கணவருடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் 17 வருடங்கள் கழித்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ