ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பாவனா பாலகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் பாவனாவிற்கு பல ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியில் பாய்ஸ் விசஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மும்பையை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் தமிழில் நன்றாக பேசும் திறமை உடையதால் இவரை தமிழ் மக்கள் ரசிக்க ஆரம்பித்தனர். தொகுப்பாளர், பாடகர், பரதநாட்டிய கலைஞர் இன்னும் பல திறமைகள் இவருக்குள் உள்ளது. அதுமட்டுமின்றி இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பையின் பொழுதும் பெண் தொகுப்பாளராக திகழ்ந்தார்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பாவனா தொடர்ந்து பல சுவாரசியமான விஷயங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். மேலும் பாடுவது, நடனம் ஆடுவது என இவர் திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கணவர் நிகில் ரமேஷ் உடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.