சரத்குமார் மற்றும் ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆன்ட்ரியா. இவர் இதற்கு முன்பு சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். இருப்பினும் இவரை கௌதம் வாசுதேவ் மேனன் பார்த்து உங்களுக்கு நடிக்கும் திறமை உள்ளது என சினிமாவிற்குள் நுழைத்தார்.
அதன் பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. இருப்பினும் அவர் சரியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பெரும்பாலும் ஆண்ட்ரியா இவருக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மிகவும் இவரது நடிப்பு பாராட்டு பெற்றது. பச்சைக்கிளி முத்துச்சரம், தரமணி, வடசென்னை போன்ற படங்கள் இதற்கு உதாரணம்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதுபோல மலைச்சாரலை ரசிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதற்கு ரசிகன் ஒருவர் பின் பக்கத்தில் வந்து உங்களை கட்டி பிடிக்க ஆசை என்று கமெண்ட் செய்துள்ளார்.